
கற்றாழையினால் கிடைக்கும் நன்மைகள்!!!
கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம். அதனால் அது தலை முதல் கால் வரை பயன்படுகிறது. அது மட்டுமா என்ன, நம் உடலின் உட்புறமும் கூட பயன்படுகிறது. பன்முக செயல்திறனைக் கொண்ட செடியாக விளங்கும் கற்றாழையை ஒரு சிறந்த வீட்டு சிகிச்சை மருந்தாக இந்தியா மட்டுமல்லாது, உலகமே ஏற்று கொண்டுள்ளது. நம் உடலின் உள்ளேயும், வெளியேயும் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இதில் உள்ளதால், இதனை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது கற்றாழையால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றிப் பார்ப்போமா!!!
வெட்டுக் காயங்கள் கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களும், ஆன்டி-செப்டிக் குணங்களும் அதிகமாக உள்ளது. அதனால் வெட்டுக் காயங்கள், புண்கள், பூச்சிக் கடிகள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து, பாக்டீரியாவை எதிர்த்து போராடவும் செய்யும்
0 comments:
Post a Comment